பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இந்தியா - நிர்மலா சீதாராமன் பெருமிதம்

பொருளாதாரத்தில் உலக அளவில் 10வது இடத்தில் இருந்த இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மகராஜ்கஞ்ச்,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், உத்தரபிரதேசத்தின் மகராஜ்கஞ்ச் மாவட்டத்தில் நடந்த கடன் வழங்கும் முகாமில் கலந்து கொண்டார். இதில் 40,011 பேருக்கு ரூ.1,143 கோடி கடன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:-

நல்ல நிலையிலான குடிமக்களின் வாழ்க்கைத்தரம் கொண்ட ஒரு நாடுதான் பொருளாதாரத்தில் வலுவான நிலையில் இருப்பதாக அர்த்தம். அதன் மூலம் ஒவ்வொருவரும் பலனடைவார்கள்.

அந்தவகையில் உலக பொருளாதாரத்தில் 10-வது இடத்தில் இருந்த இந்தியா, பிரதமர் மோடி தலைமையின் கீழ் 5-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. அடுத்த ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளில் 3-வது இடத்தை பிடித்து விடும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com