இந்தியாவில் பருவமழை இதுவரை சராசரியை விட 16 சதவீதம் குறைவு

இந்தியாவில் பருவமழை இதுவரை சராசரியை விட 16 சதவீதம் குறைவு; மக்களிடையே கோடைகால விதைக்கப்பட்ட பயிர்களின் உற்பத்தி குறித்த கவலை!!
இந்தியாவில் பருவமழை இதுவரை சராசரியை விட 16 சதவீதம் குறைவு
Published on

புதுடெல்லி

டெல்லி, மும்பை போன்ற பெரிய நகரங்கள் மழை காரணமாக நீரில் மூழ்கியுள்ள நிலையில், புதன்கிழமை முடிவடைந்த வாரத்தில் நாட்டில் பருவமழை சராசரியை விட 20 சதவீதம் குறைவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தை மேற்கோள்காட்டி, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மத்திய, மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மழை குறைவாக பெய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அடுத்த சில நாட்களில் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் லேசான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. பஞ்சாப், அரியானா, சண்டிகர், மேற்கு உத்தரப்பிரதேசம், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

மேலும், அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுராவில் மழைப்பொழிவு குறையும் என்றும் அது கூறியுள்ளது.

ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, சராசரி பருவமழை கோடை காலத்தில் விதைக்கப்பட்ட பயிர்களின் உற்பத்தி குறித்து கவலைகளை எழுப்பியுள்ளதாகவும், இந்தியாவின் விளைநிலங்களில் 55 சதவீதம் மழையால் ஆனது, மற்றும் விவசாயம் 2.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் 15 சதவீதம் ஆகும். இது ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகும். ஏனெனில், விவசாய உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பருவமழை முக்கியமானது.

சோயாபீன் மற்றும் பருத்தி வளரும் மத்திய பிராந்தியங்களில் வாரத்தில் 68 சதவீதம் குறைவான மழை பெய்தது, அதே நேரத்தில் ரப்பர் மற்றும் தேயிலை வளரும் தென் மாநிலமான கேரளாவில் 71 சதவீதம் குறைந்த மழைப்பொழிவைப் பெற்றதாக வானிலை அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக, ஜூன் 1 ஆம் தேதி பருவமழை தொடங்கியதிலிருந்து சராசரியை விட 16 சதவீதம் குறைவாக மழை பெய்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com