அமைதி, உண்மைக்காக மட்டுமே இந்தியா ஆயுதங்களை எடுத்துள்ளது: ராஜ்நாத் சிங் பேச்சு

அமைதி மற்றும் உண்மைக்காக மட்டுமே இந்தியா ஆயுதங்களை எடுத்துள்ளது என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.
அமைதி, உண்மைக்காக மட்டுமே இந்தியா ஆயுதங்களை எடுத்துள்ளது: ராஜ்நாத் சிங் பேச்சு
Published on

ஐதராபாத்,

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் நடந்த சேட்டக் ஹெலிகாப்டரின் வைர விழா மாநாட்டில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று கலந்து கொண்டார்.

அவர் பேசும்போது, இந்தியாவில் பாதுகாப்பு உற்பத்தி துறையில், இதற்கு முன்பு, நாம் எதிர்பார்த்த வேகத்தில் முன்னேற்றம் அடைய முடியவில்லை. பாதுகாப்பு தேவைகளுக்காக நாம் வெளிநாடுகளை சார்ந்து இருந்தோம். அது தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இந்தியாவின் பாதுகாப்பு தேவைகளுக்காக அந்நிய நாடுகளையே நாம் சார்ந்து இருக்க முடியாது. அதனால், நமது தோள்களை நாமே ஸ்திரப்படுத்தி கொள்ள வேண்டும்.

நாகரீகம் சார்ந்த மதிப்புகள், அமைதி மற்றும் உண்மை ஆகியவற்றுக்காக மட்டுமே இந்தியா ஆயுதங்களை எடுத்துள்ளது. ஒருபோதும் யாருக்கு எதிராகவும் வம்பு சண்டைக்கு போகும் எண்ணம் இந்தியாவுக்கு இருந்ததில்லை என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com