இந்தியாவில்தான் பெண் விமானிகள் அதிகம் - மகளிர் ஆணையம் தகவல்

இந்தியாவில்தான் பெண் விமானிகள் அதிகமாக உள்ளதாக மகளிர் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில்தான் பெண் விமானிகள் அதிகம் - மகளிர் ஆணையம் தகவல்
Published on

புதுடெல்லி,

சிவில் விமான போக்குவரத்துத்துறையில் இந்தியாவில்தான் பெண் விமானிகள் அதிகம் இருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சிவில் விமான போக்குவரத்துத்துறையில் உள்ள மொத்த விமானிகளில் 12.4 சதவீதம் பேர் பெண்கள். உலக சராசரியைவிட இது 3 மடங்கு அதிகம் ஆகும்.

இந்தியாவுக்கு அடுத்ததாக அயர்லாந்தில் 9.9, தென் ஆப்பிரிக்காவில் 9.8, ஆஸ்திரேலியா 7.5, கனடா 7, ஜெர்மனி 6.9, அமெரிக்கா 5.5, இங்கிலாந்து 4.7, நியூசிலாந்து மற்றும் ஹாங்காங் நாடுகளில் தலா 4.5 சதவீதம் பெண்கள் சிவில் விமான போக்குவரத்துத்துறையில் விமானிகளாக உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com