

புதுடெல்லி,
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் இன்று செய்தியாளார் சந்திப்பில், இந்திய ராணுவ வீரர்களை, கெரேனா வைரசிடம் இருந்து காக்க வேண்டியது அவசியம் என்றும், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.
மேலும் முப்படைகளையும் கொரோனா சிறிய அளவில் தான் பாதித்துள்ளது. பொறுமை மற்றும் கட்டுப்பாட்டுடன் இருந்ததால் தான், கொரோனாவில் இருந்து எங்களை பாதுகாக்க முடிந்தது. கொரோனாவை எதிர்த்து போரிட வேண்டுமானால், நாம் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை ஏற்று கொள்ள வேண்டும். கொரோனாவில் இருந்து மீண்டு வர பொறுமையும், கட்டுப்பாடும், தன்னம்பிக்கையும் நமக்கு பெரிய அளவில் உதவும்.
முப்படைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை வீணாக்காமல் பயனுள்ள வகையில் செலவு செய்வோம். எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பணிகளை எதிர்கொள்ளும் திறமை உள்ளது. பிராந்திய சக்தியாக உருவெடுக்க வேண்டுமானால், மற்றவர்களுக்கு உதவ வேண்டுதே தவிர சார்ந்திருக்கக்கூடாது. மேக் இன் இந்தியாவை ஆதரிப்பது முக்கியம். இந்த திட்டம் மூலம், நமக்கு தேவையான ஆயுதங்களை இங்கேயே தயாரிக்க வேண்டும்.
மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் மற்றும் பிற ஏஜென்சிகள் நாட்டில் மருத்துவ உபகரணங்களை தயாரிப்பதற்கான புதுமையான யோசனைகளைக் கொண்டு வந்துள்ளன. அவை கொரோனா வைரசை பற்றி எங்களுக்கு உதவுவதற்காக நாங்கள் இறக்குமதி செய்திருந்தோம்.
நமது மக்கள் பெரும்பான்மையாயோர் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இதனால், நாம் அருகில் உள்ள யாரேனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டால், நம்மால் விரைவில் தெரிந்து கொள்ள முடியும். ஆயுதங்கள், வெடிமருந்துகள், தளவாடங்கள் ஆகியவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். தற்போது இந்த சவாலை, நமது தொழிற்சாலைகள், ஆராய்ச்சி அமைப்புகளுக்கு அளித்தால், நமக்கு தேவையான ஆயுதங்களை இங்கேயே தயாரிக்க முடியும்.
ஆயுதப்படைகளாக, கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் எங்கள் பொறுப்பை நாங்கள் புரிந்துகொள்கிறோம். நாங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும், ஏனென்றால் எங்கள் வீரர்கள், மாலுமிகள் மற்றும் விமான வீரர்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டால், நாங்கள் எங்கள் மக்களை எவ்வாறு காத்திட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.