மோடி தலைமையின் கீழ் இந்தியா பாதுகாப்பாக உள்ளது: ஜே.பி.நட்டா

மோடி தலைமையின் கீழ் நாடு பாதுகாப்பாக இருக்கிறது என்று ஜே.பி.நட்டா கூறினார்.
மோடி தலைமையின் கீழ் இந்தியா பாதுகாப்பாக உள்ளது: ஜே.பி.நட்டா
Published on

2 நாள் பயணம்

பா.ஜனதா ஆட்சி நடக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதையொட்டி, பா.ஜனதாவை தேர்தலுக்கு தயார்படுத்துவதற்காக, பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் உத்தரகாண்டுக்கு சென்றார். மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். ரைவாலா என்ற இடத்தில் நேற்று ராணுவத்தினருடனான நிகழ்ச்சியில் ஜே.பி.நட்டா பங்கேற்றார்.

அங்கு அவர் பேசியதாவது:-

மோடி பிரதமரானவுடன், பாதுகாப்பு படைகளை பலப்படுத்தும் பணி தொடங்கி விட்டது. 36 ரபேல் போர் விமானங்கள், படையில் சேர்க்கப்பட்டு வருகின்றன. 28 அபாச்சி ஹெலிகாப்டர்கள், 15 சினூக் ஹெலிகாப்டர்கள், 145 இலகுரக பீரங்கிகள் ஆகியவை படையில் சேர்க்கப்பட்டுள்ளன.

ராணுவ பட்ஜெட் உயர்வு

கடந்த 2020-2021 நிதியாண்டில் ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1 லட்சத்து 43 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.4 லட்சத்து 78 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டது. ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் கோடிக்கு புதிய ஆயுதங்கள் வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மோடி தலைமையின் கீழ் நாடு பாதுகாப்பாகவும், வலிமையாகவும் இருக்கிறது. வேகமாக நடைபோட தயாராக இருக்கிறது. அனைத்து வானிலைக்கும் ஏற்றவகையில், 3 ஆயிரத்து 812 கி.மீ. தூரத்துக்கு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ராணுவத்துக்கும், எல்லை சாலை அமைப்புக்கும் பாராட்டுகள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com