ஜி-20 வரி ஒப்பந்த கட்டமைப்பில் இந்தியா இணைந்தது

பொருளாதார கூட்டுறவு வளர்ச்சி அமைப்பு (OECD)/ஜி20 வரி ஒப்பந்த கட்டமைப்பில் இந்தியா இணைந்துள்ளது.
ஜி-20 வரி ஒப்பந்த கட்டமைப்பில் இந்தியா இணைந்தது
Published on

புதுடெல்லி,

பொருளாதார டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக எழுந்த வரிப் பிரச்சினைகளுக்கு ஒருமனதான தீர்வு காணவும், லாபத்தை மாற்றிக் கொள்ளவும், இந்தியா உட்பட பொருளாதார கூட்டுறவு வளர்ச்சி அமைப்பில் (OECD)/ஜி20 உள்ள பெரும்பாலான நாடுகள், ஒரு உயர் நிலை அறிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளன.

இந்த அறிக்கையில் முன்மொழியப்பட்ட தீர்வு இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது - முதல் தூண்: இது சந்தை அதிகார வரம்புகளுக்கு, கூடுதல் லாபத்தை மறு ஒதுக்கீடு செய்வது. இரண்டாவது தூண்: குறைந்தபட்ச வரி மற்றும் வரி விதிகளுக்கு உட்பட்டது.

இந்த தீர்வுக்கான அடிப்படை கோட்பாடுகள், சந்தைகளுக்கு அதிக இலாபத்தைப் பெற வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளன. எனவே இந்த தீர்வுக்கு இந்தியா ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்த தீர்வு, வளரும் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு அர்த்தமுள்ள மற்றும் நிலையான வருவாயை ஒதுக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் மாதத்திற்குள் முதலாவது தூண் மற்றும் இரண்டாவது தூண் ஆகியவற்றை ஒரு தொகுப்பாக அமல்படுத்த இந்தியா தொடர்ந்து ஆக்கபூர்வமாக செயல்படும் என்றும் சர்வதேச வரிகொள்கையின் முன்னேற்றத்திற்கு சாதகமாக பங்களிக்கும் என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com