101வது ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் இந்தியா: திருப்பதியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு


101வது ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் இந்தியா: திருப்பதியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு
x

இஸ்ரோ குழுவினர், விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையான வழிபட்டனர்.

திருமலை,

இஸ்ரோவின் 101 வது ராக்கெட் நாளை மறுநாள் விண்ணில் சீறி பாய உள்ளது. இதன் வாயிலாக, புவியை கண்காணிக்கும் செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்படும்.

இந்த நிலையில் இன்று அந்த விண்கலத்தின் மாதிரியுடன் திருப்பதி மலைக்கு விஞ்ஞானிகள் குழுவினருடன் இஸ்ரோ தலைவர் நாராயணன் வந்திருந்தார். விஐபி பிரேக் தரிசனம் மூலம் அவர் ஏழுமலையான வழிபட்ட நிலையில் அவருக்கும் விஞ்ஞானிகள் குழுவினருக்கும் தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

1 More update

Next Story