இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 131 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3,408- ஆக உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 131 பேருக்கு கொரோனா
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 76 ஆயிரத்து 330 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 42 ஆயிரத்து 242 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 ஆயிரத்து 408 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 680 ஆக உள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 220.01 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com