இந்தியாவில் மேலும் 159 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,400 ஆக உள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புதுடெல்லி,

கொரோனாவின் புதிய வகையான 'ஜேஎன்.1' வகை தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த வகை கொரோனா வேகமாகப் பரவுவதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுமென கூறப்படுகிறது. ஜே.என்.1 வகை உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ ஆரம்பித்தது.

டிசம்பர் 5-ம் தேதி வரை இரண்டு இலக்கங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்தது. ஆனால் குளிர்காலம் தொடங்கிய பிறகு தொற்று பரவல் சற்று அதிகமானது. கடந்த டிசம்பர் 31-ம் தேதி அன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 841 பேர் பாதிக்கப்பட்டனர். இது கடந்த 2021-ம் ஆண்டு மே மாதத்தில் பதிவான அளவில் 0.2 சதவீதம் ஆகும்.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 159 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,400 ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் கொரோனாவால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 92 சதவீதம் பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் குணமடைந்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com