இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 174 ஆக சரிவு: தொற்றால் 2 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Image Courtacy: PTI
Image Courtacy: PTI
Published on

புதுடெல்லி,

நமது நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து சரிகிறது. நேற்று முன்தினம் 237 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை மேலும் சரிந்து 202 ஆனது. இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் சரிந்து 174 ஆக பதிவாகி உள்ளது. இதுவரை 4 கோடியே 49 லட்சத்து 91 ஆயிரத்து 756 பேர் தொற்று பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 322 பேர் மீண்டனர். இதுவரையில் மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 56 ஆயிரத்து 681 பேர் மீண்டுள்ளனர்.

தொற்று மீட்பு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் 4 பேர் பலியாகினர். நேற்று மேற்கு வங்காளத்திலும், மேகாலயாவிலும் தலா ஒருவர் இறந்தனர். இன்று கொரோனா தொற்றுக்கு மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர். இதன்படி தொற்றால் நாட்டில் இறந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 882 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் இன்று 150 குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,193 ஆக குறைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com