தடுப்பூசி சான்றிதழ்களுக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை

தடுப்பூசி சான்றிதழ்களுக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேசி வருவதாக வி.முரளீதரன் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி சான்றிதழ்களுக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி வி.முரளீதரன் எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறி இருப்பதாவது:-

தற்போது தடுப்பூசி பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை. கொரோனா தொற்றால் சாதாரணமான வெளிநாட்டுப்பயணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தற்போது பயணத்தில் பலதரப்பு நெறிமுறைகள் இல்லை.

பல நாடுகள் கொரோனா நெகட்டிவ் என்னும் சான்றிதழ்களை கேட்கின்றன. தடுப்பூசி சான்றிதழ்களுக்கு பரஸ்பரம் அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com