நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 7 சதவீதமாக இருக்கும் - நிர்மலா சீதாராமன்

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 7 சதவீதமாக இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 7 சதவீதமாக இருக்கும் - நிர்மலா சீதாராமன்
Published on

அமெரிக்காவில் நடைபெறுகிற சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திரக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

அவர் வாஷிங்டனில் சர்வதேச நிதியத்தின் தலைமையகத்தில் நடந்த ஒரு அமர்வில் பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, "நடப்பு நிதி ஆண்டில் மிக வேகமாக வளர்ந்து வருகிற பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று சர்வதேச நிதியமும், உலக வங்கியும் கணித்துள்ளன. இந்தியப்பொருளாதாரம் நல்ல நிலையில் செல்கிறது. நடப்பு நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையின்படி பார்த்தால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 7 சதவீதமாக இருக்கும்" என்று குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com