உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா

2027ம் ஆண்டு உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என்று சர்வதேச நிதி நாணயம் தெரிவித்துள்ளது.
உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா
Published on

புதுடெல்லி,

உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியா, கடந்த 10 ஆண்டு கால பொருளாதாரத்தில் 105 சதவிகித வளர்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தரவறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2015-ம் ஆண்டில் 2.1 டிரில்லியன் டாலராக இருந்த நிலையில், தற்போது இருமடங்காக அதிகரித்து 2025-ல் 4.3 டிரில்லியன் டாலர் என்ற நிலையை அடைந்துள்ளது.

தற்போது, ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரிதளவிலான மாற்றம் இல்லாததால், 2024 25 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் வாய்ப்புகளும் உள்ளன. 2027ம் ஆண்டு ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி உலகின் 3வது பெரிய பொருளாதாரமாகவும் உருவெடுக்கும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அமெரிக்கா 30.3 டிரில்லியன் டாலர்களுடன் முதலிடத்திலும், சீனா 19.5 டிரில்லியன் டாலர்களுடனும் உள்ளன. தற்போதைய வேகத்தில் ஒவ்வோர் ஒன்றரை வருடங்களுக்கும் இந்தியா, தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 டிரில்லியன் டாலர்களை சேர்க்க முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வேகம் தொடர்ந்தால், 2032 ஆம் ஆண்டின் இறுதிக்குள், நாடு 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com