பாலின சமத்துவ இடைவெளி தரவரிசை பட்டியல் : இலங்கையை விட பின்தங்கிய இந்தியா

146 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் பாலின சமத்துவம் காட்டுவதில் இந்தியா 135வது இடத்தில் உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஜெனீவா,

2022 ஆம் ஆண்டுக்கான பாலின சமத்துவ இடைவெளி பற்றிய அறிக்கையை உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ளது. 146 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் பாலின சமத்துவம் காட்டுவதில் இந்தியா 135வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை விட ஐந்து இடங்கள் முன்னேறிய போதிலும் இந்த பட்டியலில் இந்தியாவின் நிலை

இந்த பட்டியலில் அண்டை நாடுகளான வங்காளதேசம் 71-வது இடத்திலும் நேபாளம் 96-வது இடத்தையும் பிடித்துள்ளன. இலங்கை 110-வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் கடைசி இரண்டு இடங்களை பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பிடித்துள்ளன. உடல்நலம் மற்றும் பாதுகாப்பு பிரிவில் இந்தியா 146-வதாக கடைசி இடத்தில் உள்ளது.

உலகின் மிகவும் பாலின சமத்துவ நாடாகத் தொடர்ந்து ஐஸ்லாந்து முதல் இடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து பின்லாந்து, நார்வே, நியூசிலாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com