இணைய டிஜிட்டல் பணமான ‘கிரிப்டோ கரன்சி’ பயன்பாட்டில் இந்தியா 2-வது இடம்

இணைய டிஜிட்டல் பணமான ‘கிரிப்டோ கரன்சி’ பயன்பாட்டில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.
இணைய டிஜிட்டல் பணமான ‘கிரிப்டோ கரன்சி’ பயன்பாட்டில் இந்தியா 2-வது இடம்
Published on

புதுடெல்லி,

உலக அளவில் ஏராளமான ஆன்லைன் வணிக பரிவர்த்தனைகளுக்கு கிரிப்டோ கரன்சி என்கிற டிஜிட்டல் பணம்தான் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிட்காயின் போன்ற பலவகை டிஜிட்டல் நாணயங்கள் இதில் அடங்கும்.

இந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டின் கடந்த ஜூன் மாதம் வரையிலான கால கட்டத்தில் கிரிப்டோ கரன்சிகளை அதிகம் பயன்படுத்திய 20 நாடுகளை வரிசைப்படுத்தி கிரிப்டோ பகுப்பாய்வு தளமான செயினாலிசிஸ் ஒரு அட்டவணையை வெளியிட்டு உள்ளது. இதில் வியட்நாம் நாடு முதல் இடத்தில் இருக்கிறது. இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.

பல நாடுகளும் கிரிப்டோ கரன்சியை கையாளுவதால், கடந்த ஆண்டில் கிரிப்டோ கரன்சியின் பயன்பாடு 800 சதவீதம் அதிகரித்து இருப்பதாக செயினாலிசிஸ் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com