கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டம் 47 ஆக அதிகரித்துள்ளது - மத்திய சுகாதாரத்துறை

கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டங்கள் 47 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டம் 47 ஆக அதிகரித்துள்ளது - மத்திய சுகாதாரத்துறை
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 991 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2015 பேர் மீண்டுள்ளனர். குணம் அடைந்தோர் சதவிகிதம் 13.85 ஆக உள்ளது. அதேபோல், கொரோனோ பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,792 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 488 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சக இணைச்செயலாளர் லாவ் அகர்வால் தெரிவிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 991 அதிகரித்து மொத்த எண்ணிக்கை 14,792 பேர் ஆகி உள்ளது. இதில் சற்றே ஆறுதல் அளிக்கும் விதமாக இதுவரை 22 மாவட்டங்களில் புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்படவில்லை மொத்தமாக 47 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களாக ஒரு புதிய நோயாளிகள் கூட கண்டறியப்படவில்லை. தற்போது இந்த 47 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒருவருக்கு கூட இல்லை என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com