

புதுடெல்லி,
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனா தொற்று பாதிப்பு 13 ஆயிரத்து 166 ஆக இருந்தது. நேற்று 11 ஆயிரத்து 499 ஆக குறைந்தது.
இந்நிலையில், இன்று கொரோனா பாதிப்பு மேலும் குறைந்துள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 ஆயிரத்து 273 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 16 ஆயிரத்து 117 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து 20 ஆயிரத்து 439 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரையில் இந்த தொற்றில் இருந்து குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 22 லட்சத்து 90 ஆயிரத்து 921 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் ஏற்படுகிற உயிரிழப்பு தொடர்ந்து சரிகிறது. இன்று 243 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 13 ஆயிரத்து 724 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 472 ஆக குறைந்துள்ளது.
நாட்டில் மொத்தம் இதுவரை 1,77,44,08,129 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.