இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,921 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,921 பேருக்கு கொரோனா தொற்று
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பரவல், தற்போது மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் புதிதாக பாதிப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,62,707 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 133 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,58,063 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 20,652 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,09,20,046 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 1,84,598 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com