நாடு முழுவதும் 257 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 257 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

புதுடெல்லி,

சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களில் 257 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ளது. இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 257 பேர் சிகிச்சையில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகளே உள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை. 257 பேரும் சுகாதாரத்துறை கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. தற்போதைய சூழலை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com