நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3.43 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3.43 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையில், தினசரி பாதிப்பு தொடர்ந்து 4 லட்சத்துக்குள் இருந்து வருகிறது. நேற்று 3 லட்சத்து 62 ஆயிரத்து 727 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,40,46,809 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 4,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,62,317 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 3,44,776 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,00,79,599 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 37,04,893 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 17,92,98,584 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com