

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருகிறது. நேற்று முன்தினம் 33,750 பேருக்கும், நேற்று 37,379 கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் இன்று 58,097 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.50 கோடியை தாண்டியுள்ளது. கொரோனா தினசரி பாதிப்பு விகிதம் 4.18% ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 15,389 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நாடு முழுவதும் குணமடைந்தோர் எண்னிக்கை 3,43,21,803 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 534 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 4,82,551 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,14,004 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 2,135 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்றில் இருந்து 828 பேர் குணமடைந்த நிலையில் 1,307 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக ஒமைக்ரான் பாதிப்பு பதிவான மாநிலங்கள் விவரம்;-
மராட்டியம் - 653, டெல்லி -464, கேரளா - 185, குஜராத் - 154, ராஜஸ்தான் -174 பேருக்கு பாதிப்பு பதிவாகி உள்ளது.