தங்க நகைகள் இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகள் - மத்திய அரசு அறிவிப்பு

தங்க நகைகள் இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் (டி.ஜி.எப்.டி) நேற்று வெளியிட்ட அறிவிப்பில், "குறிப்பிட்ட தங்க நகைகள் மற்றும் பொருட்களுக்கு இறக்குமதிக்கு இலவசம் என்பதில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது" என்று கூறியுள்ளது.

இதன்படி ஒருவர் வெளிநாட்டில் இருந்து சில தங்கப் பொருட்களை கொண்டு வருவதற்கு (இறக்குமதி) அரசாங்கத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டும். இருப்பினும், இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் இருக்காது என்று கூறப்படுகிறது.

இந்த நிதியாண்டில் ஏப்ரல்-மே மாதங்களில் தங்கம் இறக்குமதி சுமார் 40 சதவீதம் குறைந்து ரூ.38 ஆயிரம் கோடியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com