இந்திய எல்லைக்குள் தெரியாமல் நுழைந்த வங்காளதேச சிறுவன் மனிதாபிமான முறையில் ஒப்படைப்பு

கவனக்குறைவாக இந்திய எல்லைக்குள் நுழைந்துவிட்டதாக சிறுவன் பாதுகாப்பு படையினரிடம் கூறினான்.
image tweeted by @BSF_meghalaya
image tweeted by @BSF_meghalaya
Published on

ஷில்லாங்,

மேகாலயாவின் தெற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் கவனக்குறைவாக வழிதவறிச் சென்ற வங்கதேசத்தைச் சேர்ந்த சிறுவன், நல்லெண்ண நடவடிக்கையாக, அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக இந்திய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய எல்லைக்குள் சுற்றித்திரிந்த சிறுவனை இந்திய பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரித்ததில், தான் இந்திய எல்லைக்குள் வேண்டுமென்றே நுழையவில்லை என்றும், கவனக்குறைவாக இந்திய எல்லைக்குள் நுழைந்துவிட்டதாகவும் பாதுகாப்பு படையினரிடம் கூறினான்.

இதையடுத்து சிறுவன், அந்நாட்டு பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து இந்திய பாதுகாப்பு படையை சேர்ந்த அதிகாரி பிரதீப் குமார் கூறுகையில், இதுபோன்று இந்திய பகுதிக்குள் நுழைபவர்கள் சிறார்களாகவும், அப்பாவிகளாகவும் இருக்கும் இதுபோன்ற சமயத்தில் இரு அண்டை நாடுகளின் எல்லைக் காவலர்கள் மனிதாபிமான அணுகுமுறையைக் கடைப்பிடித்துள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை வலுப்படுத்தவும், பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தவும் இந்தப் பிரச்னைகள் சுமுகமாகத் தீர்க்கப்படுகின்றன என்று அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com