

புதுடெல்லி,
ரஷியாவின் விலாடிவோஸ்டோக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டம் நடக்கிறது. ரஷ்ய அதிபர் புதின் விடுத்த அழைப்பின் பேரில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, 2 நாள் பயணமாக நாளை ரஷியாவுக்கு செல்கிறார்.
தனது ரஷ்ய பயணம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதினுடன் இருதரப்பு உறவின் அனைத்து அம்சங்கள் மற்றும் பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஆவலாக இருக்கிறேன். எனது பயணம், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் கொண்டுள்ள ஆர்வத்தை கோடிட்டுக் காட்டுகிறது.
அதுபோல், கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க வரும் உலக தலைவர்களை சந்திப்பதற்கும் ஆவலாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.