சமுத்ராயன் திட்டம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ

ஆழ்கடலுக்கு மனிதனை அனுப்பும் சமுத்ராயன் திட்டம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புதுடெல்லி,

ஆழ்கடலில் இதுவரை கண்டறியப்படாத கனிமங்கள் போன்ற ஆழ்கடல் வளங்களை ஆய்வு செய்வதற்கு மனிதர்களை கடலில் 6,000 மீட்டர் ஆழத்துக்கு அனுப்பும் சமுத்ராயன் திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்காக 3 பேர் அமர்ந்து செல்லும் வகையில் 'மத்ஸ்யா 6000' என்ற ஆய்வு வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமுத்ராயன் திட்டம் அடுத்த ஆண்டு (2025) இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என புவி அறிவியல் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "கடலுக்கு அடியில் 6,000 மீட்டர் ஆழம் வரை மனிதர்களை அழைத்துச் செல்லும் 'மத்ஸ்யா 6000' வாகனம் நன்றாக உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த வாகனம் சோதனை செய்யப்படலாம். அடுத்த ஆண்டு, 6,000 மீட்டருக்கும் அதிகமான ஆழமான கடலுக்கு நமது ஆய்வு குழுவை அனுப்ப முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com