ஆப்கானிஸ்தானில் உயர்கல்விக்கு பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து இந்தியா கவலை

ஆப்கானிஸ்தானில் உயர்கல்விக்கு பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்துள்ள தலீபான்கள் பெண்கள் உயர்கல்விக்கு தடை விதித்து உள்ளனர். பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இது உலக நாடுகளின் கண்டனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி என பல நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

இந்த நிலையில் இந்தியாவும் இந்த விவகாரத்தில் கவலை வெளியிட்டு இருக்கிறது.

இது குறித்து வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், 'இது தொடர்பான அறிக்கைகளை நாங்கள் கவலையுடன் கவனத்தில் கொண்டுள்ளோம். ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்கான காரணத்தை இந்தியா தொடர்ந்து ஆதரித்து வருகிறது' என்றார்.

உயர்கல்விக்கான அணுகல் உட்பட அனைத்து ஆப்கானிஸ்தானியர்களின் உரிமைகளை மதிக்கும், பெண்கள் மற்றும் சிறுமிகளின் சம உரிமைகளை உறுதிப்படுத்தும் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பிரதிநிதித்துவ அரசாங்கத்தை நிறுவுவதன் முக்கியத்துவத்தை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com