சூடான் நாட்டு மக்களுக்கு 25 டன் மருத்துவ பொருட்களை இந்தியா வழங்கியது

சூடான் நாட்டில் கடந்த மாதம் ராணுவத்துக்கும், துண ராணுவத்துக்கும் இடையே உள்நாட்டு போர் மூண்டது.
சூடான் நாட்டு மக்களுக்கு 25 டன் மருத்துவ பொருட்களை இந்தியா வழங்கியது
Published on

புதுடெல்லி, 

சூடான் நாட்டில் கடந்த மாதம் ராணுவத்துக்கும், துண ராணுவத்துக்கும் இடையே உள்நாட்டு போர் மூண்டது. அங்கு வசித்து வரும் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்தியர்களை விமானங்கள் மூலம் மத்திய அரசு இந்தியாவுக்கு அழைத்து வந்தது.

இந்நிலையில், உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடான் மக்களுக்கு இந்தியா 25 டன் எடையுள்ள மருத்துவ உதவி பொருட்களை நன்கொடையாக வழங்கி உள்ளது.

அப்பொருட்களை ஏற்றிச்சென்ற சி17 ரக தனி விமானம், போர்ட் சூடான் விமான நிலையத்தில் தரை இறங்கியது. மருத்துவ பொருட்களை சூடான் அதிகாரிகளிடம் இந்திய தூதர் பி.எஸ்.முபாரக் ஒப்படைத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com