ரூ. 1.20 லட்சம் கோடிக்கு உள்நாட்டு ராணுவ தளவாடங்களை வாங்கியுள்ளோம்; ராஜ்நாத் சிங் தகவல்

போர் முறை முழுவதும் தொழில்நுட்பம் சார்ந்தது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்
டெல்லி,
2024-25ம் நிதியாண்டில் இந்தியா ரூ. 1.20 லட்சம் கோடிக்கு உள்நாட்டில் தயாரான ராணுவ தளவாடங்களை வாங்கியுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜ்நாத் சிங் இது குறித்து கூறுகையில்,
2021-22ம் நிதியாண்டியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்களை ரூ. 74 ஆயிரம் கோடிக்கு வாங்கினோம். ஆனால், 2024-25ம் நிதியாண்டில் ரூ. 1.20 லட்சம் கோடிக்கு உள்நாட்டு ராணுவ தளவாடங்களை வாங்கியுள்ளோம். தேசிய பாதுகாப்பு தொடர்பான சவால்களை சமாளிக்க தன்னிரைவு பெறும் வகையில் உள்நாட்டு ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்து வருகிறோம். நவீன போர் முறையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மத்திய அரசு அறியும். தற்போதைய போர் முறை முழுவதும் தொழில்நுட்பம் சார்ந்தது. ஆபரேஷன் சிந்தூரின் போது நாம் அதை வெளிப்படுத்தினோம்
என்றார்.






