2-வது தடவையாக நீர்மூழ்கி கப்பலில் இருந்து நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி

2-வது தடவையாக நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது.
2-வது தடவையாக நீர்மூழ்கி கப்பலில் இருந்து நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி
Published on

விசாகப்பட்டினம்,

நீர்மூழ்கி கப்பலில் இருந்து பாய்ந்து சென்று இலக்கை தாக்கவல்ல பாலிஸ்டிக் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) வடிவமைத்துள்ளது. இந்த வாரம், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடல் பகுதியில் கே-4 நீர்மூழ்கி கப்பலில் இருந்து இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

நேற்று 2-வது நாளாக அங்கு இச்சோதனை நடைபெற்றது. இது, இந்திய கடற்படையின் வலிமையை பறைசாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 ஆயிரத்து 500 கி.மீ.வரை பறந்து சென்று இலக்கை தாக்கக்கூடிய இந்த ஏவுகணை, ஒட்டுமொத்த பாகிஸ்தானையும், சீனாவின் பல பகுதிகளையும் எட்டக்கூடியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com