

மும்பை
தற்போதுள்ள உற்பத்தி அளவை இருமடங்காக ஆக்குவதற்கு மத்திய அரசு திட்டமிடுவதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது இந்தியாவில் 6,800 மெகாவாட் அணுமின்சாரத்தை தயாரிக்கிறது. இந்த அளவை மேலும் 7 ஆயிரம் மெகாவாட்டுடன் இணைத்து அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். இதை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இயந்திரங்களின் உதவியுடன் செய்யவுள்ளோம். ஆகையால் 700 மெகாவாட் அணு மின்சாரம் உற்பத்தி செய்யும் 10 அலகுகளில் முதலீடு செய்யவுள்ளோம். மத்திய அமைச்சரவை ஏற்கனவே அணு மின்சாரம் தயாரிக்க 10 அழுத்தப்பட்ட கனநீர் உலைகளை அமைக்க ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
என்றாலும் அணு மின்சாரம் இந்தியாவின் முதன்மை மின்சாரம் ஆதாரமாக முடியாது என்றார் அமைச்சர். தூய்மையான , சூழலுக்கு கேடு விளைவிக்காத, 24 மணி நேரமும் கிடைக்கக்கூடிய மின்சாரம் இதன் மூலம் கிடைக்கும். நீர்மின்சாரமும், அணு மின்சாரமும் இன்னமும் செலவு மிக்கவைதான். சூரிய ஆற்றல் மின்சாரம் பகல் வேளைகளில்தான் உற்பத்தியாகும்; காற்றடிக்கும் நேரத்தில்தான் காற்றாலைகள் இயங்கும். ஆனால் அணு மின்சாரம் அப்படியல்ல; இருந்தாலும் இதற்கு தேவையான யுரேனியத்தை இறக்குமதி செய்வதில் சிக்கல் இருக்கிறது. அணுசக்தி விநியோக குழுவில் இந்தியா இணைவதை சீனா எதிர்க்கிறது. இருந்தாலும் நாம் முன்னேறிச் செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் கோயல்.
சுற்றுச்சூழல் சிக்கல்
சுற்றுச்சூழல் பிரச்சினையில் அமெரிக்கா போல இந்தியா இருக்காமல் இயற்கையை மதிக்கிறோம். இயற்கை மனிதரின் வாழ்வில் ஒருங்கிணைந்த ஒன்று என்று நாம் எப்போதுமே நம்புகிறோம் என்றும் கோயல் தெரிவித்தார்.