'ஸ்பேஸ் எக்ஸ்' மூலம் முதல் முறையாக செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் இந்தியா

'பால்கான்-9' ராக்கெட் மூலம் இஸ்ரோவின் 'ஜிசாட்-20' செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
'ஸ்பேஸ் எக்ஸ்' மூலம் முதல் முறையாக செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் இந்தியா
Published on

புதுடெல்லி,

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(இஸ்ரோ) முதல் முறையாக, எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் உதவியுடன் தனது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் 'நியூ ஸ்பேஸ் இந்தியா' மற்றும் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனங்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இஸ்ரோவின் 'ஜிசாட்-20' என்ற உயர் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் தனது 'பால்கான்-9' ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த உள்ளது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில், அமெரிக்கவின் புளோரிடாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com