மாலத்தீவுக்கு இந்தியா ரூ.3,750 கோடி உதவி - ஜெய்சங்கர் அறிவிப்பு

மாலத்தீவுக்கு இந்தியா ரூ.3,750 கோடி உதவிகள் வழங்குவதாக ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.
மாலத்தீவுக்கு இந்தியா ரூ.3,750 கோடி உதவி - ஜெய்சங்கர் அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், மாலத்தீவு வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாகித்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதையடுத்து, மாலத்தீவில் 6.7 கி.மீ. தூர பிரமாண்ட பாலம் கட்டும் திட்டத்துக்கு இந்தியா ரூ.3 ஆயிரம் கோடி கடனாகவும், ரூ.750 கோடி மானியமாகவும் வழங்கும் என்று ஜெய்சங்கர் அறிவித்தார்.

தலைநகர் மாலே அருகில் உள்ள 4 தீவுகளுக்கு இந்த பாலம் இணைப்பு வசதியை அளிக்கிறது. மாலத்தீவு-இந்தியா இடையே வழக்கமான கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் ஜெய்சங்கர் கூறினார்.

மாலத்தீவுக்கு உணவு பொருட்கள், கட்டுமான பொருட்கள் வினியோகத்துக்கான ஒதுக்கீட்டை இந்தியா புதுப்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com