

மும்பை,
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா டிசம்பரில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததாக கடந்த ஜனவரி 27-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஒப்பந்தம் டிசம்பர் மாதத்துக்குள் கையெ ழுத்தாகும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந் திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மும்பையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம் டிசம்பர் மாதம் கையெழுத்தானவுடன், அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதத்துக்குள் ஒப்பந்தம் அமலுக்கு வந்து விடும். 93 சதவீத இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு ஏறத்தாழ பூஜ்ய வரியுடன் ஐரோப்பிய நாடுகளின் சந்தை திறந்துவிடப்படும். அது போல், ஐரோப்பிய ஒன்றியத்தின் சொகுசு கார்கள், ஒயின் ஆகியவற்றின் விலை இந்தியாவில் கணிசமாக குறையும். இவ்வாறு அவர் கூறினார்.