அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை - பெட்ரோலிய மந்திரி

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்யப்பட உள்ளதாக பெட்ரோலிய மந்திரி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை பெட்ரோலில் கலந்து பயன்படுத்தினால், அது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கிறது. மேலும், கச்சா எண்ணெய் இறக்குமதியையும் குறைக்க முடியும். இந்தநிலையில், பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

10 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை இந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்குள் நிறைவேற்ற இலக்கு நிர்ணயித்தோம். ஆனால், அதற்கு முன்பே ஜூன் மாதம் இலக்கை நிறைவேற்றி விட்டோம்.

அதுபோல், 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை 5 ஆண்டுகளுக்கு முன்பே அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து, 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல், சில குறிப்பிட்ட பெட்ரோல் விற்பனை நிலையங்களில் விற்கப்படும்.

படிப்படியாக அதிகரித்து, 2025-ம் ஆண்டுக்குள் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல், அனைத்து இடங்களிலும் விற்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com