உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி

இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி
Published on

பனஸ்கந்தா,

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தியோதர் பகுதியில் புதிய பால் பண்ணை வளாகம் மற்றும் பனாஸ் பால் பண்ணையின் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

பின்னர் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக உள்ளது. கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாலை நம்பியே இருக்கிறது. இந்தியா ஆண்டுக்கு 8.5 லட்சம் கோடி ரூபாய்க்கு பால் உற்பத்தி செய்கிறது.

கிராமங்களின் பரவலாக்கப்பட்ட பொருளாதார அமைப்பு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. கோதுமை மற்றும் அரசியின் விற்பனை கூட ரூ.8.5 லட்சம் கோடிக்கு சமமாக இல்லை. பால் துறையின் மிகப்பெரிய பயனாளிகளாக சிறு விவசாயிகள் உள்ளனர். புதிய பால் பண்ணை வளாகம் மற்றும் பனாஸ் டெய்ரியின் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலை ஆகியவை உள்ளூர் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com