ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்த 4 இந்திய பெண்கள் நாடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட வாய்ப்பில்லை

ஆப்கானிஸ்தான் சிறையில் உள்ள ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்த 4 கேரளாவைச் சேர்ந்த 4 பெண்கள் நாடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட வாய்ப்பில்லை என்று மூத்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
Image courtesy :thehindu.com
Image courtesy :thehindu.com
Published on

புதுடெல்லி

13 நாடுகளை சேர்ந்த ஐ.எஸ் அமைப்பின் 408 உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 4 இந்தியர்கள், 16 சீனர்கள், 299 பாகிஸ்தானியர்கள், வங்காளதேசம், மாலத்தீவு சேர்ந்தவர்கள் தலா 2 பேர் .ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் 4 பேரும் இந்திய பெண்கள். அந்த 4 பெண்கள் சோனியா செபாஸ்டியன் அல்லது ஆயிஷா, ரபீலா, மெரின் ஜேக்கப் அல்லது மரியம் மற்றும் நிமிஷா அல்லது பாத்திமா ஈசா ஆகியோர் ஆவார்

கோரசன் மாகாணத்தில் (ஐ.எஸ்.கே.பி)ஐ.எஸ் அமைப்பில் தங்கள் கணவருடன் இருந்தனர். பின்னர் அவர்கள் கால்நடையாக ஈரானில் இருந்து ஆப்கானிஸ்தான் வந்து உள்ளனர். அங்கு நடந்த போரில் அவர்களது கணவர் கொல்லப்பட்டனர்,

கேரளாவை சேர்ந்த 4 பெண்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்ஹார் நகருக்கு 2016-18 ஆண்டுகளுக்குள் சென்றுள்ளனர். ஐ.எஸ் போராளிகளில் 1000 பேரில் பெண்களும் இருந்தனர்.

செபாஸ்டியன் கேரளாவின் காசர்கோட்டைச் சேர்ந்தவர் மே 31, 2016 அன்று தனது கணவர் அப்துல் ரஷீத் அப்துல்லாவுடன் மும்பை விமான நிலையத்தில் இருந்து சென்று உள்ளார். செபாஸ்டியன் ஒரு பொறியியல் பட்டதாரி.

மெர்ரின் ஜேக்கப் அல்லது மரியம் பாலக்காட்டில் வசிக்கும் பெஸ்டின் வின்சென்ட்டை மணந்தார். ஐ.எஸ். எல்லைக்குள் வசிப்பதற்காக இருவரும் 2016 ல் ஆப்கானிஸ்தானுக்கு தப்பிச் சென்றனர். தம்பதியினர் திருமணத்திற்குப் பிறகு இஸ்லாத்திற்கு மாறினர், வின்சென்ட் யஹ்யாவின் அடையாளத்தை ஏற்றுக்கொண்டார். வின்சென்ட் பின்னர் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டார்.

வின்சென்ட்டின் சகோதரர் பெக்சன் மற்றும் அவரது துணைவியார் நிமிஷா அல்லது பாத்திமாவும் இஸ்லாத்திற்கு மாறினர், அவர்களுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு தப்பிச் சென்றனர்.

2020 ஆகஸ்டில் கிழக்கு ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் சிறைச்சாலையைத் தாக்கிய ஐ.எஸ் பயங்கரவாதிகளில் ஒருவரான காசர்கோட்டைச் சேர்ந்த டாகடர் இஜாஸ் கல்லுகெட்டியா புராயில் (37) என்பவரை ரெபீலா திருமணம் செய்து கொண்டார். இந்த தாக்குதலில் சுமார் 30 பேர் கொல்லப்பட்டனர்.

மார்ச் 2020 இல், ஸ்ட்ராட்நியூஸ் குளோபல்.காம், வலைத்தளம் மூன்று பெண்களிடும் பேட்டி எடுத்த வீடியோவை வெளியிட்டது.

கைதிகளை நாடு கடத்த ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் 13 நாடுகளிடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறி உள்ளார். ஆனால் அவர்கள் நாடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட வாய்ப்பில்லை என்று மூத்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டாலும், காபூலில் உள்ள மூத்த அதிகாரிகள், இந்தியாவில் என்ன செய்ய போகிறார்கள் என்பதைப் பற்றி அறிய அவர்கள் காத்திருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டினர்.

இந்த 4 இந்திய பெண்கள் திரும்புவதில் பல்வேறு அதிகார நிறுவனங்களிடையே ஒருமித்த கருத்து இல்லை என்றும் அவர்கள் மீண்டும் வர அனுமதிக்கப்படுவது சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது. பெண்கள், தங்கள் குழந்தைகளுடன் காபூலில் உள்ள இந்திய பாதுகாப்பு நிறுவனங்களால் 2019 டிசம்பரில் பேட்டி காணப்பட்டனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும் போது இங்குள்ள நிகழ்வுகளில் அவர்கள் திரும்பி வந்து ஒப்புதல் பெற அனுமதிப்பதே ஒரு பெரிய விஷயம் . இருப்பினும், அவர்கள் மிகவும் தீவிரமானவர்கள் என்பதை அவர்களின் பேட்டி வெளிப்படுத்தியது என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் வேண்டுகோளின் பேரில் இண்டர்போல் பெண்களுக்கு கிரிம்சன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com