வர்த்தக ஒப்பந்தம்.. இந்திய அதிகாரிகளுடன் அமெரிக்க குழு தலைவர் இன்று பேச்சுவார்த்தை


வர்த்தக ஒப்பந்தம்.. இந்திய அதிகாரிகளுடன் அமெரிக்க குழு தலைவர் இன்று பேச்சுவார்த்தை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 16 Sept 2025 7:55 AM IST (Updated: 16 Sept 2025 7:57 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்க குழுவின் தலைவர் வர்த்தக ஒப்பந்தம் குறித்து இன்று இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

புதுடெல்லி,

இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 5 சுற்று பேச்சுவார்த்தைகள் முடிந்தநிலையில், 6-வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த மாதம் 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடக்க இருந்தது. ஆனால், இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததால், இந்த பேச்சுவார்த்தை தள்ளிப்போனது.

இந்நிலையில், அமெரிக்க குழுவின் தலைவர் பிரென்டன் லிஞ்ச் இன்று (செவ்வாய்க்கிழமை) வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தை, 6-வது சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னோட்டமாக அமையும் என்று மத்திய வர்த்தக அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் இரு நாடுகளுக்கு இடையில், தூதரகம், வர்த்தக சிறப்பு அதிகாரிகள் மற்றும் அமைச்சர் மட்டத்தில் என பல வகைகளில் நடைபெற்று வருவதாகவும், பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில், வர்த்தகத்துறை சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் பங்கேற்க உள்ளார்.

1 More update

Next Story