இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து; ஜெய்சங்கர்

இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து; ஜெய்சங்கர்
Published on: 

டெல்லி,

இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 2வது முறையாக பதவியேற்றார். ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் இந்தியா, சீனா, கடனா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரி விதித்தார். குறிப்பாக, இந்திய பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதையடுத்து, இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது. மேலும், இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பல மாதங்களாக, பல கட்டங்களாக நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு இந்த ஆண்டுக்குள் இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் கையெழுத்து

இந்நிலையில், இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டத்தை எட்டிவிட்டதாகவும், ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறுகையில்,

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. எஞ்சியுள்ள பிரச்சினைகள் நமது பக்கத்தை சார்ந்தது அல்ல. அமெரிக்க தரப்பில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வர்த்தக ஒப்பந்தம் கடைசி கட்ட பேச்சுவார்த்தையில் உள்ளது. இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என நம்புகிறோம். கடைசி கட்டத்தில் அனைவரும் பொறுமையை இழந்துள்ளனர்.

சமநிலையான மற்றும் ஒப்பிடக்கூடிய பொருளாதார குழுக்களுடன் ஒப்பிடும்போது எங்களுக்கு பயனளிக்கும் வர்த்தக ஒப்பந்தத்தையே நாங்கள் விரும்புகிறோம்.

என்றார்.

இதனிடையே, அடுத்த மாதம் 14 மற்றும் 15 ஆகிய இரு தேதிகளில் அமெரிக்காவின் மியாமியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாடில் பங்கேற்க பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தின்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பை பிரதமர் மோடி சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

X