உலகம் முழுவதும் அமைதியையே இந்தியா விரும்புகிறது: மத்திய அரசு

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். இது உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அங்கு வசித்து வரும் தங்கள் குடிமக்களை மீட்பதில் அனைத்து நாடுகளும் கவனம் செலுத்தி உள்ளன.
உலகம் முழுவதும் அமைதியையே இந்தியா விரும்புகிறது: மத்திய அரசு
Published on

தலீபான்களின் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான் சென்றிருக்கும் விவகாரத்தில் இந்தியா ஏற்கனவே கவலை வெளியிட்டு இருந்தது.இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி மீனாட்சி லெகி மீண்டும் இந்த கவலையை பகிர்ந்திருந்தார்.தனது தொகுதியில் நடந்த பா.ஜனதாவின் மக்கள் ஆசி யாத்திரையில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆப்கானிஸ்தான் விவகாரத்தை நிருபர்கள் எழுப்பினர்.

அதற்கு அவர் பதிலளிக்கையில், உலகம் முழுவதிலும் அமைதி நிலவுவதையே இந்தியா விரும்புகிறது என்று தெரிவித்தார். எனினும் இந்த விவகாரத்தில் வேறு எந்த தகவலையும் வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com