மார்ச் 31க்குள் இந்தியா மாவோயிஸ்ட் இல்லாத நாடாக மாறும்: அமித் ஷா உறுதி

முக்கியமான நிறுவனங்களை பாதுகாக்கும் பொறுப்பு சி.ஐ.எஸ்.எப்.க்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமித்ஷா தெரிவித்தார்.
மார்ச் 31க்குள் இந்தியா மாவோயிஸ்ட் இல்லாத நாடாக மாறும்: அமித் ஷா உறுதி
Published on

கட்டாக்,

ஒடிசா மாநிலம் கட்டக் மாவட்டத்தில் உள்ள முண்டாலியில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (CISF) 57வது நிறுவன தின விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு பேசியதாவது;

”பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் சி.ஐ.எஸ்.எப் வீர்ர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளனர். சவால்கள் இருந்தபோதிலும், பாதுகாப்புப் படையினர் ஒவ்வொரு பணியையும் உறுதியுடனும் ஒழுக்கத்துடனும் மேற்கொண்டனர். மார்ச் 31 ஆம் தேதிக்குள் நாடு மாவோயிஸ்ட் இல்லாத நாடாக மாறும் என்பதை நான் தேசத்திற்கு இன்று உறுதியளிக்க விரும்புகிறேன்.

நாட்டின் வளர்ச்சியும், 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை அடைவதும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வை ஆகும். தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் முக்கியமான நிறுவனங்களைப் பொறுத்தவரை, அவற்றை பாதுகாக்கும் பொறுப்பு சி.ஐ.எஸ்.எப்.க்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது, எனவே கவலைப்படத் தேவையில்லை. சி.ஐ.எஸ்.எப் பணியாளர்கள் இரவும் பகலும் அனைத்து வானிலை நிலைகளிலும் தங்கள் கடமைகளைச் செய்ய எப்போதும் தயாராக உள்ளனர்.”

இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com