இந்தியா விலைவாசி உயர்வுக்கான சவாலை சந்திக்கும் - மத்திய நிதி அமைச்சகம்

போர் சூழலால் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இந்தியா விலைவாசி உயர்வுக்கான சவாலை சந்திக்கும் - மத்திய நிதி அமைச்சகம்
Published on

புதுடெல்லி,

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள மாதாந்திர பொருளாதார அறிக்கையில், ஈரான் போர் பதற்றம் எதிரொலியாக இந்தியப் பொருளாதாரத்தில் பணவீக்க அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளது. இந்த அறிக்கையின் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் மற்றும் போர் பதற்றம் காரணமாக எரிசக்தி மற்றும் உரங்களின் வினியோகம் பாதிக்கப்படலாம். இது பொருட்களின் விலையை உயர்த்தி பணவீக்கத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடல்வழி வணிகத் தடைகள் மற்றும் போர் சூழலால் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் உள் ளது.

சர்வதேச அளவில் நெருக்கடி இருந்தாலும், இந்தியாவின் உள்நாட்டு பலம் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும். உள்நாட்டிலேயே பொருட்களுக்கான தேவை அதிகமாக இருப்பது வெளிநாட்டுப் பாதிப்புகளைக் குறைக்க உதவும். விவசாயிகளைப் பாதுகாக்க, எதிர்வரும் காரீப் பருவத்துக்கான (சித்திரைபட்டம்) உர மானியத்தை அரசு 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com