பிஜியின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா உதவும்: பிரதமர் மோடி அறிவிப்பு

பிஜி நாட்டின் பிரதமர் சிதிவேனி ரபுகா டெல்லியில் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
பிஜியின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா உதவும்: பிரதமர் மோடி அறிவிப்பு
Published on

புதுடெல்லி, 

3 நாட்கள் அரசு முறை பயணமாக டெல்லி வந்துள்ள பிஜி நாட்டின் பிரதமர் சிதிவேனி ரபுகாவுடன் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

 பிரதமர் மோடிக்கும், சிதிவேனி ரபுகாவிற்கும் இடையிலான பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளில்   ஏழு ஒப்பந்தங்களில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர். பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: இந்தியாவும், பிஜியும் ஒரே பாதையில் பயணிக்கின்றன. வளமான இந்தியா- பசிபிக் பகுதியை ஆதரிக்கின்றன.

கடல்சார் பாதுகாப்புத் துறையில் பிஜி இந்தியாவிற்கு ஒரு முக்கியமான நாடு. பாதுகாப்புத் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதற்காக ஒரு செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பிஜியின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா பயிற்சி மற்றும் உபகரணங்களை வழங்கும் என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com