'இந்தியா விரைவில் ஒரு டிரில்லியன் டாலர் ஏற்றுமதிக்கு தயாராகும்' - மத்திய மந்திரி அஸ்விணி வைஷ்ணவ்

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த நிதி ஆண்டில் 762 பில்லியன் டாலர்களை எட்டியது என அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்தார்.
'இந்தியா விரைவில் ஒரு டிரில்லியன் டாலர் ஏற்றுமதிக்கு தயாராகும்' - மத்திய மந்திரி அஸ்விணி வைஷ்ணவ்
Published on

புதுடெல்லி,

இந்தியா விரைவில் ஒரு டிரில்லியன் டாலர் ஏற்றுமதிக்கு தயாராகும் என மத்திய மந்திரி அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"பிரதமர் மோடி 'மேக் இன் இந்தியா' திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இது மிகவும் துணிச்சலான நடவடிக்கை ஆகும். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக விமர்சித்தனர். ஆனால் இது போன்ற திட்டங்கள்தான் இந்தியாவின் வெற்றிகரமான ஏற்றுமதி வர்த்தகத்திற்கு காரணமாக அமைந்துள்ளன.

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த நிதி ஆண்டில் 762 பில்லியன் டாலர்களை எட்டியது. இந்தியா விரைவில் ஒரு டிரில்லியன் டாலர் ஏற்றுமதிக்கு தயாராகிவிடும்."

இவ்வாறு மத்திய மந்திரி அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com