ஆசிய கோப்பை ஆக்கி: சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா - பிரதமர் மோடி வாழ்த்து

இந்த அணி போட்டி முழுவதும் சிறப்பான திறமையையும் கூட்டுமுயற்சியையும் வெளிப்படுத்தி, இறுதிப் போட்டியில் ஒரு மறக்க முடியாத வெற்றியைப் பதிவு செய்து உள்ளது.
பிரதமர் மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி,

ஜப்பானின் காகமிகஹரா நகரில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்டோருக்கான (சப்-ஜூனியர்) ஆசிய கோப்பை ஆக்கி தொடரில் இந்திய ஆண்கள் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

வாழ்த்துகள்

இந்த நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-

‘நமது இளம் ஹாக்கி வீரர்களின் அற்புதமான சாதனை. 2026 ஆம் ஆண்டுக்கான 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையை வென்ற இந்திய 18 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள்.

இந்த அணி போட்டி முழுவதும் சிறப்பான திறமையையும் கூட்டுமுயற்சியையும் வெளிப்படுத்தி, இறுதிப் போட்டியில் ஒரு மறக்க முடியாத வெற்றியைப் பதிவு செய்தது.’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com