உணவு பதப்படுத்தும் தொழிலில் இந்தியாவிற்கு அதிக முதலீடு கிடைக்கும் வாய்ப்பு

அடுத்த மூன்றாண்டுகளில் இந்தியாவில் உணவு பதப்படுத்தும் தொழிலில் ரூ. 60,000 கோடி வரை முதலீடு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
உணவு பதப்படுத்தும் தொழிலில் இந்தியாவிற்கு அதிக முதலீடு கிடைக்கும் வாய்ப்பு
Published on

புபனேஸ்வர்

புபனேஸ்வரில் நடைபெற்று வருகிற வேர்ல்ட் ஃபுட் இந்தியா நிகழ்ச்சியில் இந்திய பிரதிநிதிகளின் தலைவரான அமைச்சக செயலர் ஜே பி மீனா இத்துறையை இந்திய அரசு முன்னுரிமை துறையாக அங்கீகரித்துள்ளது என்றார்.

உணவு பதப்படுத்துதல் அல்லது உள்கட்டமைப்பு வசதிகள் இன்மை உணவுப் பொருட்கள் பாழாவதை தடுக்கவில்லை; இதன் மீது கவனம் செலுத்தவே இந்திய அரசு அதை முன்னுரிமைத் துறையாக அங்கீகரித்துள்ளார். அடுத்த மூன்றாண்டுகளில் இந்திய, வெளிநாட்டு நிறுவனங்கள் ரூ.50,000 - 60,000 கோடியை முதலீடாக உணவு பதப்படுத்தல் துறையில் செய்யவுள்ளனர் என்று கூறினார் மீனா.

டெல்லியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி முதலீட்டாளர்களுக்கு பொன்னான வாய்ப்பாக இருக்கும் என்று கூறினார் மீனா.

டெல்லி நிகழ்ச்சியை ஒட்டி ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ரோட் ஷோவில் 250 ற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com