இந்திய-வங்காளதேச எல்லை பகுதிகள் முழுவதும் வேலி அமைக்கும் பணி தீவிரம்!

இந்திய-வங்காளதேச எல்லை பகுதிகள் முழுவதும் வேலி அமைக்கும் பணி 2022ம் ஆண்டிற்குள் நிறைவடையும் என எல்லை பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.
இந்திய-வங்காளதேச எல்லை பகுதிகள் முழுவதும் வேலி அமைக்கும் பணி தீவிரம்!
Published on

அகர்தலா,

திரிபூரா மாநிலத்தில் இருக்கும் இந்திய-வங்காளதேச எல்லை பகுதிகள் முழுவதும் வேலி அமைக்கும் பணிகள் விரைவில் நிறைவடையும் என எல்லை பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

இது குறித்து எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி சுஷாந்தா குமார் நாத் தெரிவித்துள்ளதாவது,

திரிபுராவில் உள்ள 856 கிமீ இந்தியா-வங்காளதேச சர்வதேச எல்லையில் 80 சதவீதத்திற்கும் அதிகமான வேலிகள் அமைக்கும் பணி ஏற்கனவே முடிவடைந்துள்ளது. திரிபுராவின் கிழக்குப் பகுதியில் கடந்த ஆண்டு கணிசமான வேலி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

கடந்த ஆண்டு 10 கி.மீ.,க்கு வேலி அமைக்கப்பட்டது. மீதமுள்ள 31 கி.மீ., நுண்துளை இணைப்புக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2022ம் ஆண்டிற்குள் மாநிலத்தின் இந்தியா-வங்காளதேச எல்லையின் முழுப் பகுதியிலும் வேலி அமைத்து, மின்விளக்குகளை அமைப்போம் என நம்புகிறோம்.

இதுவரை சர்வதேச எல்லை வழியாக பதுங்கியிருந்த 218 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திரிபுரா தேசிய விடுதலை முன்னணியின் (என்.எல்.எப்.டி) இரண்டு தீவிரவாதிகள் சனிக்கிழமை எல்லை பாதுகாப்பு படையிடம் சரணடைந்தனர். அவர்களில் ஒருவர் அண்டை நாடான வங்கதேசத்தில் ஆயுதப் பயிற்சி எடுத்தவர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com