எல்லையில் படைகளை விலக்கிக் கொள்வது குறித்து இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை

எல்லையில் படைகளை விலக்கிக் கொள்வது குறித்து இந்தியா-சீனா ராணுவ பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
எல்லையில் படைகளை விலக்கிக் கொள்வது குறித்து இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை
Published on

புதுடெல்லி,

இந்தியா - சீனா எல்லையில் இருந்து படைகளை விலக்கி கொள்வது குறித்து, இரு நாடுகளின் ராணுவ பிரதிநிதிகள் இடையே, இதுவரை 10 சுற்று பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன. அதன்படி, ஒரு சில இடங்களில் இருந்து படைகள் திரும்பப் பெறப்பட்டன. மற்ற இடங்களில் இருந்தும் படைகளை முழுமையாக விலக்கி கொள்வது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி இந்தியா-சீனா ராணுவத் தளபதிகள் இடையே, நேற்று 11வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. கிழக்கு லடாக்கில் உள்ள பல்வேறு புள்ளிகளில் இருந்து படைவீரர்களை விலக்குவது நேற்றுமுன்தினம் காலை 10.30 மணிக்கு தொடங்கிய உரையாடல் இரவு 11.30 மணிக்கு முடிந்தது. ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா மற்றும் 900 சதுர கி.மீ டெப்சாங் சமவெளி போன்ற மோதல் அதிகமுள்ள பகுதிகளில் படைகளை விலக்குவது செய்வது குறித்து அவர்கள் விவாதித்தனர்.

முன்னதாக பிப்ரவரி 20 அன்று, இந்திய மற்றும் சீன இராணுவம் எல்லையில் பதற்றத்தை குறைக்க 10 வது சுற்று இராணுவ உரையாடலை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதுவரை, பாங்காங் ஏரியின் இரு கரைகளிலும் படை விலகல் செயல்முறை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com