இந்திய விமானப்படை விமான விபத்து: விமானி பலி

இந்திய விமானப் படையின் ஜாகுவார் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த விமானி உயிரிழந்தார். #Airforce #AirCrash
இந்திய விமானப்படை விமான விபத்து: விமானி பலி
Published on

கட்ச்,

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்திரா பகுதியில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஜாகுவார் ரக போர் விமானம் தரையில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி விமானியும் ஏர் கமான்டருமான சஞ்சய் சௌஹான் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் சிக்கி அப்பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த 5 மாடுகளும் இறந்துள்ளன என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விமானம் ஜாம்நகர் விமானப்படை தளத்தைச் சேர்ந்தது ஆகும். வழக்கமான பயிற்சியின் போது இந்த விமானம் செயலிழந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன் விமானப்படையின் மைக்ரோலைட் வைரஸ் SW-80 ஹெலிகாப்டர் அசாம் மாநிலத்தின் மாஜுலி தீவில் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த விங் கமாண்டர்களான ஜே.ஜேம்ஸ் மற்றும் டி.வாட்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர். அவர்கள் விமானத்தை அவசரமாக தரையிறக்க முயற்சி செய்த போது கீழே விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளானது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com