ஆக்சிஜன் சப்ளைக்கு உதவி செய்யும் பணியில் இந்திய விமானப்படை!

இந்தியாவில் ஆக்சிஜன் சப்ளைக்கு உதவி செய்யும் பணியில் இந்திய விமானப்படை விமானங்கள் களமிறங்கியுள்ளன.
ஆக்சிஜன் சப்ளைக்கு உதவி செய்யும் பணியில் இந்திய விமானப்படை!
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதிதீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 1 கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 24 லட்சத்து 28 ஆயிரத்து 616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, கொரோனா தடுப்பூசி தடுப்பாடு, ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடுகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பலரும் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் ஆக்சிஸன் தேவை அதிரித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் ஆக்சிஜன் சப்ளைக்கு உதவி செய்யும் பணியில் இந்திய விமானப்படை விமானங்கள் களமிறங்கியுள்ளன. இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி-17, ஐ.எல். 76 சரக்கு விமானங்கள் ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை ஆக்சிஜன் உற்பத்தி மைய நகரங்களுக்கு கொண்டுச் செல்கிறது. அங்கு ஆக்சிஜன் நிரப்பப்பட்ட பின்னர் டேங்கர் லாரிகள் தேவையான இடங்களுக்கு சாலை மார்க்கமாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து பனாகார்க்கிற்கு டேங்கர் லாரிகளை ஏற்றிக்கொண்டு விமானப்படை விமானங்கள் சென்றன.

நாட்டில் நிலவி வரும் கொரோனா பரவல் நிலவரம், தடுப்பூசி செலுத்தும் பணிகள், படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி தற்போது அவரச ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com